- by Editor
- 1 year ago
பௌத்த பிக்குகள் வெளிநாடு செல்ல இனி 'ஸ்பெஷல்' அனுமதி கட்டாயம்
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
பௌத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை தேரர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை எதிர்காலத்தில் மீண்டும் அமல்படுத்த எதிர்பார்ப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சில காரணங்களால் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், போதைப்பொருள்களுடன் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய சில பிக்குகள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட சாசனத்துக்கு எதிரான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடலின் போது, பிக்குகள் வெளிநாடு செல்லும் முன் பரிந்துரைகளைப் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.