Monday, October 12, 2026

சர்வதேச அரங்கத்தில் இலங்கையின் பாற்சோறு


இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்பவர் சமையல் போட்டியான மாஸ்டர்செஃப் அவுஸ்திரேலியாவில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பாற்சோற்றின் விளக்கம் மற்றும் அதன் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, நடுவர்களில் ஒருவர் பாற்சோற்றை ஒரு ஓவியம் போன்றது என்று கூறியுள்ளார்.

‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பாற்சோறு மற்றும் இலங்கைக் கருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை சமைத்துள்ளார்.

அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், சிறப்பான முறையில் பாற்சோறை வழங்கியதற்காக அவரைப் பாராட்டியுள்ளனர்.  

you may also like