Thursday, October 8, 2026

மாவையை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்


''இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெல்ல வேண்டும். வென்று தமிழர்களின் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முக்கியம்.''

- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று நேரில் சந்தித்தபோது தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இல்லத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்துக்குச் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

you may also like