Thursday, October 8, 2026

பிலியந்தலையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் ஒருவர் காயம்


பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட பொலிஸார் முயன்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

you may also like