- by Editor
- 6 months ago
பிரிட்டன் அரசியல் பரபரப்பு - அடுத்த பிரதமர் யார்?
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இதனால் அந்தப் பதவிகளுக்கான புதிய தலைமை யார் என்பதற்கான அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில், தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆண்டி பர்ன்ஹாம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். பொதுவெளியில் “வடக்கு மன்னர்” என அழைக்கப்படும் அவர், கட்சிக்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டவர் என கூறப்படுகிறது.
1970 ஆம் ஆண்டு வடமேற்கு இங்கிலாந்தின் மெர்சிசைடில் பிறந்த பர்ன்ஹாம், நீண்டகாலமாக தொழிலாளர் கட்சியில் செயற்பட்டு வருகிறார். 2001 முதல் 2017 வரை லே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அவர், முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் அரசில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
பின்னர் இருமுறை தொழிலாளர் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் 2017 முதல் 2026 வரை கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி மேயராக பணியாற்றி, அந்தக் காலகட்டத்தில் மக்களிடையே பரவலான கவனம் பெற்றார்.
கொரோனா காலத்தில் மான்செஸ்டர் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசுடன் நேரடியாக மோதிய நிலையில், வடக்கு இங்கிலாந்தின் உரிமைகளுக்காக அவர் எடுத்த நிலைப்பாடு காரணமாக “வடக்கின் ராஜா” என்ற பெயர் பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ள அவர், எதிர்காலத்தில் தொழிலாளர் கட்சித் தலைமைப் போட்டியில் களமிறங்குவேன் என ஏற்கனவே சவால் விடுத்துள்ளார்.
தொழிலாளர் கட்சிக்குள் ஸ்டார்மர் மீது நிலவும் அதிருப்தியை பயன்படுத்தி, கட்சியை மக்களுடன் மீண்டும் இணைக்கும் தலைவராக பர்ன்ஹாம் உருவெடுக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், வடக்கு இங்கிலாந்தை மையமாகக் கொண்ட அவரது செல்வாக்கு தேசிய அளவில் விரிவடையுமா என்பது குறித்த கேள்விகள் இன்னும் நிலவுகின்றன.