Friday, October 9, 2026

நெல் கொள்முதல் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்


நெல் கொள்முதல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்கள் ஊடாக கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை முறையாகவும் தடையின்றியும் கொள்முதல் செய்வதற்காக அரச கொள்முதல் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், கொள்முதல் நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் உத்தியோகபூர்வ கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கி நியாயமான விலையைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

you may also like