Saturday, October 10, 2026

பின்லாந்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி


பின்லாந்து ஆரம்ப பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பின்லாந்தில், வன்டா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயதுடைய 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

12 வயது மாணவன் ஒருவனால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேற்படி மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, அந்த பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

you may also like