Saturday, October 10, 2026

பாடசாலைகளில் புதிய கட்டுப்பாடு : மாணவர் - ஆசிரியர் உறவுகள் கண்காணிப்பில்


கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நெருங்கிய உறவு மற்றும் அதனைச் சார்ந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்படும் காணொளிகள் கல்வி அமைச்சின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

அறிக்கை கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் உட்பட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் விளக்கினார்.

இந்நிலையில், குறித்த மாணவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர் தொடர்புடைய பல காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may also like