Friday, October 9, 2026

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு பிணை!


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு அந்த நாட்டு உயர்நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

நாட்டின் இரகசியங்கள் கசியவிட்டமை தொடர்பாக அவருக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது தவிர, பிரதமராக கடமையாற்றிய காலப்பகுதியில் வெளிநாட்டவரால் வழங்கப்பட்ட பரிசுகளை சட்டவிரோதமாக அவர் விற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவர் நிராகரித்திருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான், நீக்கப்பட்டதன் பின்னர் பல வழக்குகள் மற்றும் சட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில், நேற்று அவருக்கு வழங்கப்பட்ட பிணை விடுதலை மூலம், எதிர்வரும் பெப்ரவரி தம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், போட்டியிடுவதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதிக அளவில் மக்கள் ஆதரவினை அவர் பெறுவார் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவருக்கு பாகிஸ்தான் மக்கள் பெரும் ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may also like