- by Editor
- 1 year ago
ஓகஸ்ட் 2 வெளியாகும் - "கூலி" ட்ரெய்லர் !!
-
- by Editor,
- 1 year ago
- in சினிமா செய்திகள்
ஓகஸ்ட் 2 வெளியாகும் - "கூலி" ட்ரெய்லர் !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று வெளியாகும் என படக்குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பொலிவுட் நடிகர் அமீர்கான் - சத்யராஜ் - நாகார்ஜுனா - உபேந்திரா- சௌபின் சாகிர் - சுருதிஹாசன்- ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் "கூலி" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினர் மற்றும் ஏனைய இந்திய திரையுலகினர், உலக சினிமா ரசிகர்கள் என அனைவரும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதீதமாக வளர்த்துக் கொண்டுள்ளனர்.
ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று "கூலி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக "கூலி" வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.