Thursday, October 8, 2026

பாகிஸ்தான் பயணமாகும் இலங்கை அணி: போட்டி அட்டவணை வெளியானது


இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணி, எதிர்வரும் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளது.

அங்கு, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் (ODI) மற்றும் முத்தரப்பு T20I தொடர்களில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

இந்தப் போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகின்றன. அவை எதிர்வரும் 11ஆம், 13ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இதனை தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை அணி சிம்பாப்வேயுடன் 19 ஆம் (ராவல்பிண்டி) மற்றும் 25 ஆம் (லாகூர்) திகதிகளிலும், பாகிஸ்தானுடன் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 27 ஆம் (இரண்டும் லாகூரில்) திகதிகளிலும் மோதவுள்ளது.

இந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளது. 

you may also like