- by Editor
- 8 months ago
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயார்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பொறுப்பாகும் என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பரீட்சை விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்துவதற்கும், விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
எனவே, 2026 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையை உரிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.