- by Editor
- 2 years ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என கோட்டாபய மனு
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சட்ட நடவடிக்கை நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.