- by Editor
- 2 months ago
பாதாள குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைது
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
பாதாள உலகக் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ரி- 56 துப்பாக்கிக்குரிய 16 தோட்டாக்கள் மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தேகநபர் வெளியே செல்லும்போது கைது செய்யப்பட்டார் என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகநபர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சோதனையிட்டனர். இதன்போது அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரிடமிருந்து தோட்டாக்களுக்கு மேலதிகமாக 3 கிலோ கஞ்சா, 416 கிராம் ஜஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.