Friday, October 9, 2026

டில்லியில் இருந்து சிம்லா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கேளாறு


டில்லியில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் அலையன்ஸ் ஏரின் விமானம் நேற்று சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரேக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகள் இந்த விமானத்தில் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த சிக்கலைச் சரிபார்க்க விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை ஆய்வுக்காக நிறுத்தி வைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


you may also like