- by Editor
- 2 years ago
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மரக்கறி, தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம்
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு லீட்டருக்கு சுமார் 100 ரூபாய் அதிகரிக்க வணிகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பற்றாக்குறையுடன், உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையும் ஒரு லீட்டர் சுமார் 100 ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையும் அதிகரிக்கக்கூடும் என வணிகர்கள் தெரிவித்தனர்.
மரக்கறி எண்ணெய் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்கள் 04 முக்கிய நிறுவனங்களால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.