Sunday, October 11, 2026

நோர்ட்டனில் 24 மணித்தியாலங்களில் 258.6 மி.மீ. கனமழை பதிவு


கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தின் நோர்ட்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (03) காலை 8.30 மணி முதல் இன்று (04) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, கெனியன் பகுதியில் 234.6 மில்லிமீற்றர், லக்ஷபான பகுதியில் 208 மில்லிமீற்றர், காசல்ரீயில் 164 மில்லிமீற்றர், மாவுஸ்ஸாக்கலை பகுதியில் 125 மில்லிமீற்றர், மேல் கொத்மலை பகுதியில் 110.3 மில்லிமீற்றர் மற்றும் கொத்மலை பகுதியில் 105 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகள் விடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


you may also like