Monday, October 12, 2026

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது!


யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை நேற்று மாலை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்கள் பயணித்த படகுடன் கைது செய்த கடற்படையினர், அவர்கள் நால்வரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வந்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் இன்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

you may also like