- by Editor
- 3 months ago
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு யாழ். செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலி
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்று இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காகச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன், மாவட்ட பிரதி அரச அதிபர் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.