- by Editor
- 2 years ago
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்; 12 பேர் நேற்று உயிரிழப்பு, 60 பேர் காயம்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மீண்டும் பாரிய தாக்குலை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், 12 பேர் நேற்று கொல்லப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலின் போது 158 ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆயுத களஞ்சியத்தில் உள்ள சகல விதமான ஆயுதங்களையும் பிரயோகித்து வீடுகள், மகப்பேறு வைத்தியசாலைகள் உட்பட பல இலக்குகளை நேற்று காலை ரஷ்யா தாக்கியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தலைநகர் கீவி உட்பட மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தாக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலும் இராணுவ உதவிகளை மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிரிமியன் துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த ரஷ்ய யுத்த கப்பல் ஒன்று உக்ரைனால் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, உக்ரைனிய இராணுவம் யுத்த முனையில் வெற்றியடைந்து வருவதாகவும் ரஷ்யா பெரிய அளவிலான இழப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பொறிஸ் பிரிஸ்ரோரியஸ் தெரிவித்துள்ளார்.
இது தவிர ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை, மேற்கு கருங்கடல் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.