Saturday, October 10, 2026

வவுனியாவில் நான்கு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது!


போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 500போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இந்தக் கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜபக்‌ஷ்ச் தலைமையில் கான்ஸ்டபிள்களான அசங்க(61867), ரன்வெல(61518), மிதுசன்(91800), நியாம்(84963), றொசான்(86009) ஆகியோரைக் கொண்ட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

you may also like