Wednesday, October 7, 2026

நிதிப்பற்றிய குழுவில் தன்னால் முன்னிலையாக முடியாது - திறைசேரி செயலாளர்


அரச நிதிப்பற்றிய குழுவில் நாளை (30) நடைபெறவுள்ள கூட்டத்தில் தாம் முன்னிலையாக முடியாது என திறைசேரியின் செயலாளர் ஹர்சன சூரியப்பெரும கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்புக்கான கடிதம் அரச நிதிப்பற்றிய குழுவுக்கு கிடைத்துள்ளதாக குழுத் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறும் கூட்டத்தில் திறைசேரி செயலாளர் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என முன்பு குழுத் தலைவர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார்.

இலங்கை திறைசேரியால் அவுஸ்திரேலியாவுக்கு செலுத்தப்பட்ட கடன் தொகையில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் விளக்கம் அளிக்க, நிதியமைச்சின் செயலாளர் ஹர்சன சூரியப்பெருமவுக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

you may also like