Friday, October 9, 2026

'நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'


"நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது."

- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற 'என்னில் இருந்து ஆரம்பிப்போம்' அனுராதபுரம் மாவட்ட இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூம்பிச்சாங்குளம் அருகில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் பலவற்றை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

அவற்றில் பல பிரச்சினைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழுக்கு வாழ்க்கை தோல்வியடைய அனுமதிக்கப் போவதில்லை என்றும் கட்டியெழுப்பப்படும் இலங்கையில் எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு பல தொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


you may also like