- by Editor
- 1 year ago
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அமைச்சர் ஜீவன்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 'செல்வந்தி' இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் கே. ராஜூவும் பங்கேற்றுள்ளார்.
மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையகத் தமிழர்களின் மேம்பாட்டுக்காக அ.தி.மு.க. தொடர்ந்தும் குரல் கொடுத்துவருவதற்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 'நாம் - 200' நிகழ்ச்சி குறித்தும், எதிர்வரும் 21 ஆம் திகதி மலையகத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா தொடர்பிலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.