- by Editor
- 2 years ago
நாட்டில் 30 இலட்சம் பேர் பீடி பயன்படுத்துவதாக மதிப்பீடு
-
- by Editor,
- 17 hours ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 இலட்சம் பேர் பீடி மற்றும் சிகரெட் பயன்படுத்துகின்றனர் என கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.பி.எல்.ஏ. பிரேமலால் தெரிவித்துள்ளார்.
எனினும், பீடி பயன்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் முழுமையாக கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீடி உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து பீடி இலைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதாகவும், இதன் காரணமாக எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை அரசாங்கத்தால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கலால் வரி ஆணையாளர் நாயகம், நாட்டில் சுமார் 30 இலட்சம் பேர் பீடி பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் ஆண்டுக்கு 9 முதல் 10 பில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது பீடி மூலம் கிடைக்கும் வரி வருவாய் 2 பில்லியன் ரூபாயைக்கூட எட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பீடி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் இருந்து பீடி இலைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபடுவதே இதற்கு முக்கிய காரணம் என கலால் வரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.