- by Editor
- 2 years ago
நடிகர் அமீர்கானுக்கு 3வது கல்யாணம்? மணமகள் யார் தெரியுமா? கசிந்த இரகசியத் தகவல்
-
- by Editor,
- 4 months ago
- in சினிமா செய்திகள்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான், மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அமீர்கான், இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையுலகில் செயல்பட்டு வந்தார். அவரது நடிப்பில் வெளியான ‘சித்தாரே சமீன் பர்’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது. மேலும், நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது 61 வயதான அமீர்கான், 47 வயதான கௌரி ஸ்ப்ராட் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் மிகவும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமீர்கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு மனதளவில் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டதாக அமீர்கான் முன்னர் அளித்திருந்த ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த திருமணம் தொடர்பாக அமீர்கான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.