Monday, October 12, 2026

தையிட்டி விகாரைப் பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறி பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட மத வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு அருகிலுள்ள பகுதியில் காணி உரிமையாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடமராட்சி பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதுடன், பல புகைப்படங்களையும் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சந்தேகநபர்களாக இருவரும் கைது செய்யப்பட்டு, தற்போது பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

you may also like