Saturday, October 10, 2026

துயரத்தில் நேபாளம் - இலங்கை முழு ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி உறுதி


நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து தாம் ஆழ்ந்த வேதனை அடைவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவான புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வரும் நாடாக இலங்கையும், நேபாள மக்களின் துயரத்தை ஆழமாகப் பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாள அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

you may also like