- by Editor
- 4 months ago
டிஜிட்டல் துறை வருமானத்திற்கு அதிகபட்சம் 15% வரி
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம் வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் அடிப்படையில் வரி விதிக்கப்படாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார்.
‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, டிஜிட்டல் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாக சேவைகளை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் வருமானத்திற்கு அதிகபட்சமாக 15 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாக சேவை ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், தமது வருமானத்தை சுயமதிப்பீட்டு வரி அறிக்கையின் ஊடாக முறையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாதாரண வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி வீதங்களுடன் ஒப்பிடுகையில், சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு குறைந்த வரி வீதமே விதிக்கப்படுவதாகவும் ஹிரான் மெனேரிபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
எனவே, டிஜிட்டல் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாக சேவைகளை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுபவர்கள், தமக்குரிய வருமானத்தை முறையாக அறிவித்து, அதற்கான 15 சதவீத வரியை செலுத்துவது அவர்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.