- by Editor
- 1 year ago
திருமண நிகழ்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு - இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம்
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL), திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமத் தேவைகளை, அச்சங்கத்தின் உறுப்பினர்களால் மேலதிக முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமத் தேவையை தொடர்ந்து அமுல்படுத்துவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய இசை உரிம முறையில் நிரந்தர மாற்றங்களை மேற்கொள்வதற்கு சங்கத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் அவசியம் என இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் அதிகாரம் நிர்வாகக் குழுவுக்கு இல்லை என்றும் சங்கம் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச இசை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிகழ்வுகளில் இசையை வழங்கும் DJ க்களுக்கான உரிமத் தேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இசை உரிமக் கட்டமைப்பு என்பது நிகழ்வு நடைபெறும் இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இசையை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு மட்டுமே பொருந்தும் என இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேவேளை, வீடுகளில் நடைபெறும் தனியார் நிகழ்வுகளுக்கு இந்த இசை உரிமத் தேவை பொருந்தாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.