- by Editor
- 1 year ago
பண்டிகை கால ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சரித தமுனுபொல கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இணைய வழி மோசடிகள் தொடர்பான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அதிகளவிலான சலுகைகளை வழங்கும் போலி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையிடும் முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், நம்பகமான இணையத்தளங்கள் மூலம் மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.