- by Editor
- 2 years ago
தியாகி சிவகுமாரனை நாடாளுமன்றில் நினைவேந்திய கஜேந்திரன்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தியாகி பொன். சிவகுமாரனை நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்து உரையாற்றினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிய மூத்த மாவீரரான தியாகி பொன். சிவகுமாரனுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்து நினைவு கூருகின்றேன்.
அதேவேளை, தமிழனத்தின் தேசிய பூவான கார்த்திகை மலரைப் பாதணியில் பொறித்த டி.எஸ்.ஐ. பாதணி தயாரிப்பு நிறுவனத்திற்கு நாமும் தமிழ் மக்களும் காட்டிய எதிர்பை ஏற்றுக்கொண்ட அவர்கள் அவ்வாறு கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக அந்த நிறுவனத்துக்குத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்றார்.