Sunday, October 11, 2026

17 வீரர்களுக்கு 60 சொகுசு அறைகள்: விமர்சனத்திற்குள்ளாகும் பாகிஸ்தான் கிரிக்கெட்!


அமெரிக்காவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

அணியின் வீரர்கள் சரியான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் மைதானத்திற்கு வெளியில் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடரின் ஆரம்பத்திலேயே இரசிகர்கள் தங்களைச் சந்திப்பதற்காக கட்டணம் அறவிடப்பட்டமை தொடர்பாக பாகிஸ்தான் அணியின் வீரர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.

தற்போது 17 வீரர்களுக்காக 60 சொகுசு அறைகள் பதிவு செய்யப்பட்டமை குறித்து, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதிக் - உஸ் - ஸமான் (Atiq - uz - Zaman) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

'நாங்கள் விளையாடிய காலப்பகுதியில் அணியின் வீரர்களுக்கு மேலதிகமாக பயிற்றுவிப்பாளரும், அணியின் முகாமையாளருமே இருந்தோம்.

ஆனால் இப்போது 17 வீரர்களுக்கு 17 அதிகாரிகளும் அவர்களின் குடும்பங்களுமாகச் செல்கின்றனர்.

அவர்கள் விளையாடுவதற்காகச் சென்றார்களா அல்லது சுற்றுலா பயணம் சென்றார்களா?' என்று ஆதிக் கேள்வி எழுப்பியுள்ளார். 

you may also like