- by Editor
- 2 years ago
அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்தில் சிறுமிகளான இரு சகோதரிகள் மரணம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளனர்.
12 வயதான அக்காவும், 10 வயதான தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கிப் பயணித்த கார், லொறியின் பின்னால் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கான காரணமாகும் எனக் கூறப்படுகின்றது.
விபத்தில் காரில் பயணித்த சிறுமிகளின் தாய், தந்தை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை – நுபே பகுதியை சேர்ந்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.