- by Editor
- 6 months ago
தமிழ்த் தேசியச் சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலி. கிழக்கில் உருவாகியுள்ளது: தியாகராஜா நிரோஷ் தெரிவிப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"தமிழ்த் தேசியச் சக்திகளின் கூட்டிணைவு ஆட்சியே வலிகாமம் கிழக்கில் இடம்பெற்றது என்பதையிட்டு தமிழ்த் தேசியக் கொள்கைக் கூட்டினரான நாம் பெருமைப்படுகின்றோம்."
- இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராகப் பதவியேற்றுள்ள தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
நேற்று பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எமது மக்கள் தமிழ்த் தேசியக் கொள்கை வழி அரசியலையும் இலட்சியபூர்வமாக நேசிக்கின்றனர். எமது இனம் அரசியல் ரீதியில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் விடயமாக உள்ளூராட்சி சபைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், அரசியலின் அடிப்படைத் தளம் என்ற ரீதியிலும், எமது கிராமங்களை நிர்வகிப்பதற்கான அலகு என்ற வகையிலும் இந்த அலகுகூட தேசிய அரசியலின் இருப்பிடமாகவும் கொள்கை வழிப் பயணத்தின் தளமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அந்த அடிப்படையில் ஏற்கனவே கொள்கை வழிக் கூட்டாக இயங்கும் தமிழ்த் தேசியப் பேரவை (சைக்கிள்) மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் (சங்கு) பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர் இ.ஐங்கரன் மற்றும் தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் முழுமையான உத்தியோகபூர்வ பங்களிப்பு மற்றும் பகுதியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (வீடு) மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி (மான்) ஆகியன வெற்றிக்குத் தேவையான தமது பகுதியளவு பங்களிப்பை நல்கியுள்ளன. ஆகவே, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் அமையப் பெற்றது தமிழ்த் தேசியச் சக்தியின் கூட்டு ஆட்சியாகும்.
சபையில் நாம் பெற்றதை வெற்றியாகக் கருத வேண்டாம். தமிழ்த் தேசியத்தின் உறுதியான நிலைப்பாட்டுடன் கொள்கை வழி அரசியலை முன்னெடுப்பதற்கான பொறுப்பே எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் 5 வருடங்கள் சபையில் ஆட்சியை அரசியல் கட்சி பாரபட்சமற்ற வகையில் நான் முன்னெடுத்துள்ளேன். அவ்வாறாகத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் ஊழலற்ற வகையில் கொள்கை வழி அபிவிருத்தியை முன்னெடுத்தமைக்கும் மத்திய அரசு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மீறிய போது போராடியமைக்குமாகவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆணையை எமது சபையின் கொளரவ உறுப்பினர்கள் தந்தார்கள். ஒத்தழைத்த உறுப்பினர்களின் நிபந்தனை வலிகாமம் கிழக்கின் மாண்பை மேலும் உயர்த்துகின்றது." - என்றார்.