- by Editor
- 3 months ago
தமிழர்களின் கேள்விக்கு இன்று அநுர யாழில் பதில் தர வேண்டும்: சுமந்திரன் கோரிக்கை
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்."
- இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று சாவகச்சேரியில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்திலேயே இத்தகைய கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார் சுமந்திரன்.