- by Editor
- 6 months ago
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமும் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை வெனிசுலாவை உலுக்கிய 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் உயிர்ச்சேதத்தையும் சொத்துச் சேதத்தையும் ஏற்படுத்தியது. அந்த அனர்த்தத்தில் இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 243 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேரிடரால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் இதுவரை 214 பின்அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள லா குவைரா (La Guaira) பகுதியே அதிகளவிலான சேதத்தைச் சந்தித்துள்ளது.
மீட்புப் பணிகளுக்காக பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச மீட்புக் குழுக்கள் வெனிசுலாவிற்கு சென்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பேரிடரால் நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.