- by Editor
- 1 year ago
தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு பொங்கலுக்குப் பின் என்கிறார் ஸ்டாலின்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
விரைவில் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழகத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆரம்பமாகும் என தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கார்கே பங்கேற்றார். சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காணொளிக் காட்சியில் மற்றத் தலைவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.