Saturday, October 10, 2026

ட்ரம்ப் மீதான கொலை முயற்சிக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியைக் கண்டிக்கின்றேன் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து நான் அதிர்ச்சியடைகின்றேன். அவர் பாதுகாப்பாக இருப்பதையிட்டு நிம்மதியடைகின்றேன்.

இலங்கையர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான அரசியல் வன்முறைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்." - என்றார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் டொனால்ட் ட்ரம்ப் காயமடைந்தார்.

அவர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may also like