- by Editor
- 6 months ago
அமெரிக்காவில் இருந்து துப்பாக்கிகளை கடத்தினார் என கனடிய இளைஞர் கைது
-
- by Editor,
- 1 year ago
- in Canada Murasu
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சாதனங்களை கடத்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயதுடைய ஹாமில்டன் நகரைச் சேர்ந்த டேனியல் மெனசஸ் என்பவருக்கு எதிராக மொத்தம் 19 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இது ஒன்றாரியோ மாகாண பொலிஸார் மற்றும் அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட எல்லை அமலாக்கப் பாதுகாப்புப் பணிக்குழுவால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16ம் திகதி பேர்லிங்டன் நகரில் மெனசஸ் கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் எத்தனை துப்பாக்கிகளைக் கடத்த முயற்சித்தார் என்பது பற்றி பொலிஸாரால் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அனுமதியின்றி துப்பாக்கி இறக்குமதி செய்தல், தடைசெய்யப்பட்ட சாதனங்களை அனுமதியின்றி வைத்திருத்தல் , துப்பாக்கி அனுமதியின்றி வைத்திருப்பது அறிந்திருந்தும் வைத்திருத்தல் உட்பட மொத்தமாக 19 குற்றச்சாட்டுகள் இவர்ர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன்.
கைது செய்யப்பட்ட நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.