Friday, October 9, 2026

நீர் கட்டண அதிகரிப்பு குறித்து விசேட அறிவிப்பு


நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

வருடத்தில் இருமுறை மட்டுமே கட்டண திருத்தங்கள் குறித்து ஆராயப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வறட்சி நீடித்தால் நீர் விநியோகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்

எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு அம்பத்தலேயில் மேலதிகமாக 50,000 கன மீற்றர் உற்பத்தி நிலையமும், களு கங்கைத் திட்டத்தின் கீழ் 136,000 கன மீற்றர் நிலையமும் அமைக்கப்படவுள்ளன.

எனவே தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

you may also like