- by Editor
- 7 months ago
தகுந்த பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் பதில்
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
யாரேனும் தங்களை அச்சுறுத்தினால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.
ஏமனில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கான உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்தார்.
இது குறித்து அவர் சமூக வலைத்தள பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரான் போர் தொடுக்காது எனவும் ஆனால், யாரேனும் அச்சுறுத்தினால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.