- by Editor
- 5 months ago
டொனால்ட் ட்ரம்ப் - ஜி ஜின்பிங்: வர்த்தக பேச்சு வார்த்தை.
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
டொனால்ட் ட்ரம்ப் - ஜி ஜின்பிங்: வர்த்தக பேச்சு வார்த்தை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரிவிதிப்பு தொடர்பாக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க, சீனா நாடுகளுக்கு இடையில் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாக பேசியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், டொனால்ட் ட்ரம்பை தங்கள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் டொனால்ட் ட்ரம்பும், ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள எதிர்மறையான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற ட்ரம்பிடம், ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.