- by Editor
- 2 years ago
மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் ஆறு கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையெனில் விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அமைவிடம், வானிலை நிலைமை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை மதிப்பீடு செய்து விடுமுறை வழங்குவது குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.