Thursday, October 8, 2026

ரணிலின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில்: கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஓரணியில் செயற்படுவோம் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி

திகாம்பரம், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ஜீ.எல். பீரிஸ், துமிந்த திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, டிரான் அலஸ், மகிந்த அமரவீர, பவித்ரா வன்னியா ராச்சி, அகில விராஜ்

காரியவசம் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கூட்டிய சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பங்கேற்கவில்லை. எனினும், அவர் ரணில் விக்கிரமசிங்க சிகிச்சை பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிக்கு நேரில் என்று அவரின் உடல் நிலை குறித்துவிசாரித்தார்.

இதேபோன்று, இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்வதாக உறுதியளித்த முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் பங்கேற்கவில்லை. எனினும், சந்திரிகா குமாரதுங்க செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். அதனை தலதா அத்துகோரள வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

you may also like