Saturday, October 10, 2026

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு பங்களாதேஷ் தீர்மானம்!


தமது சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கு பின்னர் பங்களாதேஷ் அணி இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தமது சொந்த மண்ணில் விளையாட உள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் விளையாடவுள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் சிம்பாப்வேக்கு எதிராக ஐந்து இருபதுக்கு 20 போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி விளையாட உள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராவதற்கான நேரம் குறுகியதாக இருப்பதால் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை மாற்றியமைக்க பங்களாதேஷ் கிரிக்கெட சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

you may also like