Sunday, October 11, 2026

சட்டவிரோத மின்வேலிகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்


2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்வேலிகள் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளன என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பல்வேறு மனித நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில் 474 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன என அந்தச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

புள்ளிவிவரங்களுக்கமைய, இலங்கையில் சுமார் 6 ஆயிரம் காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மேற்படி மரணங்கள் ஏற்பட்டுள்ளன என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மின்சார சபை அதற்கு மக்களின் ஆதரவும் தேவையெனவும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களைக் கோரியுள்ளது.

you may also like