- by Editor
- 1 year ago
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த பாராளுமன்ற வாரத்தில் விவாதம்
-
- by Editor,
- 4 days ago
- in இலங்கை செய்திகள்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அடுத்து வரும் முதலாவது பாராளுமன்ற வாரத்திலேயே அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள யோசனை முன்வைக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (06) அறிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையொப்பமிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.