- by Editor
- 2 years ago
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் பாதுகாப்பான முறையில் மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் விடுதிகளுக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.