- by Editor
- 2 years ago
ஜூலையில் மட்டும் டெங்கினால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நேற்று (27) வரையில் மொத்தமாக 82,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் இதுவரை மட்டும் 27,464 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பதிவுகளில் கம்பஹா மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்த நோயாளர்களில் 21.25 சதவீதம் பேர் பதிவாகியுள்ளனர்.
அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 16,457 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,685 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, டெங்கு காரணமாக நாட்டில் 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த நோயாளர்களில் 0.07 சதவீத மரண விகிதமாக பதிவாகியுள்ளது.